தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சிக்னல் அமைக்க கோரிக்கை

அரூரில் சிக்னல் அமைக்க கோரிக்கை

அரூரில் சிக்னல் அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 09, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி -- திருப்பத்துார் - -சேலம் -- அரூர் நகருக்குள் செல்லும் வழி என, நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இவ்வழியாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்-களில் இருந்து வரும் லாரிகள், கனரக வாகனங்கள், பஸ், வேன், லாரி மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட ஏராளமான வாக-னங்கள் செல்கின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் தினமும் சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்ப-டுவது வாடிக்கையாகி விட்டது.

அரூரில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டு, போலீசார் நியமனம் செய்யப்பட்ட போதிலும், சில நேரங்களில் மட்டும் பெயரள-விற்கு போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்-டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்-கேற்ப போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் இல்லாததை பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வருகின்-றனர். எனவே, போக்கு

வரத்து நெரிசல் மற்றும் விபத்தை குறைக்க சிக்னல் அமைக்கவும், போலீசாரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us