/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கவுன்டர் திறக்க கோரிக்கை
/
மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கவுன்டர் திறக்க கோரிக்கை
மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கவுன்டர் திறக்க கோரிக்கை
மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கவுன்டர் திறக்க கோரிக்கை
ADDED : அக் 14, 2024 06:28 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் கடந்த, 1861ல், ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. ஜோலார்பேட்டை - சேலம் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும், 90 ரயில்கள் சென்று வருகின்றன.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்-கணக்கானோர் வணிகம், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக தினமும், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சென்னை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆனால், பயணிகளுக்கு ஒரு கவுன்டரில் மட்டும் டிக்கெட் வழங்கப்படுகி-றது. இதனால், பல பயணிகள் டிக்கெட் கவுன்டரில் காத்திருக்கும் போதே, ரயில் புறப்பட்டு விடுகிறது. தொடர்ந்து ஒரே கவுன்-டரில் டிக்கெட் வழங்கப்படுவதால், டிக்கெட் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுகின்றனர். எனவே, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க கூடுதல் கவுன்டர்கள் திறக்க, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகளும், வணிகர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.