ADDED : ஜூன் 15, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், குரங்குபள்ளம் அருகே, அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
இங்கு, மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், அருகி-லுள்ள வனப்பகுதியில், மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.பின், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்-டுகள், பிளாஸ்டிக் டம்ளர்களை, அப்பகுதியில் குடிமகன்கள் வீசிச்செல்வதால், பிளாஸ்டிக் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பிளாஸ்டிக் குப்பையை, மான் உள்ளிட்ட வனவி-லங்குகள் சாப்பிட்டு, உயிரிழக்கும் அபாயம் உள்-ளதால், அவற்றை அகற்ற, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
