/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய நெடுஞ்சாலையில் தோண்டிய பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
/
தேசிய நெடுஞ்சாலையில் தோண்டிய பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் தோண்டிய பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் தோண்டிய பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : அக் 09, 2024 12:50 AM
தேசிய நெடுஞ்சாலையில் தோண்டிய
பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
தர்மபுரி, அக். 9-
பாலக்கோடு அருகே, புதிய தேசிய நெடுஞ்
சாலையில் குடிநீர் குழாய் சீரமைக்க, தோண்டிய குழியால்,- விபத்து அபாயம் உள்ளதால், அதை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, புதிய தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, கல்கூடஹள்ளி மேம்பாலம் பகுதியில் கடந்த, 6 மாதங்களுக்கு முன், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்ய, தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை பகுதியில் குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து பின், தற்போது வரை குழி மூடப்படாததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், பாலக்கோடு நகர பகுதி, மாரண்டஹள்ளி, மல்லாபுரம், பெல்ரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளதால், இது குறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
எனவே, சேதமடைந்து பள்ளமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.