/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழுதான சாக்கடை கால்வாய் சீரமைக்க கோரிக்கை
/
பழுதான சாக்கடை கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 29, 2024 12:51 AM
பழுதான சாக்கடை கால்வாய்
சீரமைக்க கோரிக்கை
பாப்பாரப்பட்டி, டிச. 29-
தர்மபுரி அடுத்த, பாப்பாரப்பட்டி பகுதியில், உடைந்து போன நிலையில் உள்ள சாக்கடை கால்வாயை, சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வன்னியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள, 2வது வார்டு சின்ன ஏரிக்கரை அருகே உள்ள பகுதிகளில் சாக்கடை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், பல இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார மற்ற நிலையில் உள்ளது. மேலும், இவ்வாறு தேங்கும் கழிவுநீரால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, உடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடை கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

