/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இருசன் கொட்டாய் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
இருசன் கொட்டாய் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 09, 2025 08:05 AM
தர்மபுரி: தர்மபுரி, அதியமான்கோட்டை அருகே உள்ள சேலம் - பெங்க-ளூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றால், இருசன் கொட்டாய் உள்ளது.
பை-பாஸ் சாலையிலிருந்து ஆத்துக்கொட்டாய், முத்துகவுண்டன் கொட்டாய் வழியாக இருசன் கொட்டாய் செல்ல, 3 கி.மீ., துாரம் தார்ச்சாலை உள்ளது. இச்சாலையின் பல இடங்களில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசன்கொட்டாய் அருகிலுள்ள ஏரியி-லிருந்து, தற்போது தண்ணீர் நிரம்பி, இந்த தார்ச்சாலை வழியாக ஆற்றில் செல்கிறது. இதனால், இச்சாலையில் தண்ணீர் செல்லும் நிலையில், பாதை தெரியாத அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பல்வேறு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், இச்சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி, இந்த ஏரி கோடியின் நடுவே பாலம் அமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

