/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 22, 2026 04:44 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாட்டி பஞ்.,க்கு உட்பட்ட அஞ்சுகம் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்-பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்-களை வாங்க, அருகிலுள்ள பாப்பிசெட்டிப்பட்டிக்கு சென்று வரு-கின்றனர். அக்கடையில், 800க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்-களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அக்கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், ரேஷன் பொருட்கள் வாங்கும்போது கூட்ட நெரிசலில் தள்ளு, முள்ளு ஏற்படுவதால், அவதிக்கு உள்ளாகி வருவதாக, வேதனை தெரிவிக்கும் அஞ்சுகம் கிராம மக்கள், இப்பிரச்னையை தீர்க்க, தங்கள் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்

