/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய கணவர் உட்பட 3 பேருக்கு 'காப்பு'
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய கணவர் உட்பட 3 பேருக்கு 'காப்பு'
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய கணவர் உட்பட 3 பேருக்கு 'காப்பு'
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய கணவர் உட்பட 3 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 06, 2024 07:15 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தேமலஹள்ளியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 31; இவர் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், பேகாரஹள்ளியை சேர்ந்த நந்தினி, 26, என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த, 7 மாதத்திற்கு முன், சொந்தமாக காய்கறி கடை வைக்க இருப்பதாகவும், அதற்கு பணம் வேண்டுமென, கணவர் தினேஷ்குமார் கேட்டுள்ளார்.
நந்தினியும், தன் தந்தையிடமிருந்து, 50,000 ரூபாய் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்பும், மேலும் பணம் கேட்டு நந்தினியை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். மனமுடைந்த நந்தினி கடந்த ஆக., 2ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு மறியல் செய்து, நந்தினியின் கணவர் தினேஷ் மற்றும் அவரின் பெற்றோர் மீது நடவடிக்கை கோரி புகாரளித்தனர். ஆர்.டி.ஓ., காயத்திரி விசாரித்து வந்த நிலையில், நந்தினியின் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவர் தினேஷ்குமார், 31, அவரின் பெற்றோர் வெங்கடேசன், 50, செல்வி, 45 ஆகியோரை கைது செய்து, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.