/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டீசல் பதுக்கி விற்ற 8 பேருக்கு 'காப்பு'
/
டீசல் பதுக்கி விற்ற 8 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 09, 2025 02:15 AM
காரிமங்கலம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் லாரிகளிலிருந்து டீசல் திருடி விற்பதாக புகார் எழுந்தது-. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் காரிமங்கலம், கெரகோடஅள்ளி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு சட்ட விரோதமாக டீசலை கேன்களில் பதுக்கி விற்ற சக்திவேல், 43, பிரவீன்குமார், 25, செல்வராஜ், 38, கலைச்செல்வன், 35, குமார், 37, செல்வராஜ், 65, கோபி, 23, சுப்பிரமணி, 65 ஆகிய, 8 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து, 60,000 ரூபாய் மதிப்புள்ள, 550 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.