sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு

/

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு


ADDED : ஆக 21, 2024 06:23 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சாலையோரம் சாக்குப்பையில் வீசிசென்ற பெண் சிசு மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு பின், அரசின் தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, கொம்மநாயக்கன-ஹள்ளி தேசிய நெடுஞ்சாலை தரைப்பாலம் பகுதியில், நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவ்வழியாக, சென்றவர்கள் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமேயான பெண் சிசு, சாக்கு பையில் கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடம் சென்ற பாலக்-கோடு போலீசார், சிசுவை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவம-னையில் ஒப்படைத்தனர். அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் சாந்தி, மருத்துவர்களிடம் சிசுவிற்கு உரிய சிகிச்சை அளிக்க உத்த-ரவிட்டார். சிசுவிற்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, தர்மபுரி அரசு மருத்துவமனையிலுள்ள, தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, தர்மபுரி மாவட்டத்தில், கருவிலுள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால், கருக்க-லைப்பு செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் சம்மந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்-நிலையில், பிறந்து சில மணி நேரமேயான பெண் சிசு சாலை-யோரம் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்கோடு போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us