/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிராம பஞ்.,களை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புசிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ADDED : ஜன 05, 2025 01:25 AM
தர்மபுரி,சோகத்தூர் கிராம பஞ்., தர்ம புரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்பாட்டம் செய்தனர். அதேபோல் ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., கிராம சபையில் சிறப்பு தீர்மானம்
நிறைவேற்றபட்டது.
தர்மபுரி நகராட்சியுடன் ஏ.ஜெட்டிஹள்ளி, சோகத்தூர், இலக்கியம்பட்டி, தடங்கம் உள்ளிட்ட, 4 பஞ்.,களை இணைக்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், சோகத்துார் பஞ்., சேர்ந்த சவுளுப்பட்டி, பூசாரிப்பட்டி, மாட்டுக்கானுார், ஆட்டுக்காரம்பட்டி பகுதிகளை சேர்ந்த, 200 க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, பென்னாகரம் - தர்மபுரி நெடுஞ்சாலை, சோகத்தூர் கூட்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், தர்மபுரி அடுத்த, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., உட்பட்ட எர்ரப்பட்டியில் பஞ்., தலைவி கவுரம்மாள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், செட்டியூர், ஒட்டப்பட்டி, தேங்காமரத்துபட்டி, கோடியூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அடிப்படை வசதி மற்றும் போதிய வருவாய் இல்லாத கிராம பஞ்.,களை நகராட்சியுடன் இணைத்து, வரி என்ற பெயரில் மக்களை துன்புறுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், வளர்ச்சி என்ற பெயரில் பஞ்சாயத்து
ராஜ்களை நசுக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதை தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்., தலைவியிடம் மனு அளித்தனர்.
தர்மபுரி நகராட்சியுடன் ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றபட்டது. ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்தி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.