/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தச்சர்களுக்கு தனி நலவாரியம் பொதுக்குழுவில் தீர்மானம்
/
தச்சர்களுக்கு தனி நலவாரியம் பொதுக்குழுவில் தீர்மானம்
தச்சர்களுக்கு தனி நலவாரியம் பொதுக்குழுவில் தீர்மானம்
தச்சர்களுக்கு தனி நலவாரியம் பொதுக்குழுவில் தீர்மானம்
ADDED : ஜன 05, 2026 07:26 AM
அரூர்: தர்மபுரி மாவட்ட தச்சர்கள் முற்போக்கு சங்-கத்தின் பொதுக்குழு கூட்டம், அரூரில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், தற்போது, தச்சர்கள் பொதுவான நலவாரியத்தில் உள்ளனர்.
எனவே, தச்சர்களுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும். மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயில தச்சர்-களின் குழந்தைகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு அல்லது முழு கல்வி உதவித்தொகை அரசு வழங்க வேண்டும். தொழிலை விரிவுபடுத்தவும், இயந்திரங்கள் வாங்கவும் வங்கிக்-கடன் மற்றும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு ஒவ்வொரு தொழிலாளிக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். 60 வயதிற்கு மேற்-பட்ட தச்சு தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்-வூதியமாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்-பன உள்ளிட்ட, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.