/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி தீர்மானம்
/
ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி தீர்மானம்
ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி தீர்மானம்
ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி தீர்மானம்
ADDED : டிச 12, 2024 01:22 AM
ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை
நிறைவேற்ற கோரி தீர்மானம்
பென்னாகரம், டிச. 12-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. 5 ஆண்டு கால, வரவு - செலவுகள் கணக்கு பார்க்கப்பட்டு, கவுன்சிலர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. பின், நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாராம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வருவாயை மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகத்திற்கு வழங்க கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், ஷகிலா, துணை சேர்மேன் அற்புதம் அன்பு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.