தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கே.ஈச்சம்பாடி தடுப்பணை திட்டம் அமல்படுத்த வலியுறுத்தி தீர்மானம்

கே.ஈச்சம்பாடி தடுப்பணை திட்டம் அமல்படுத்த வலியுறுத்தி தீர்மானம்

கே.ஈச்சம்பாடி தடுப்பணை திட்டம் அமல்படுத்த வலியுறுத்தி தீர்மானம்


ADDED : பிப் 19, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்ட, மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், அரூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் இம்ரான் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் நாகராஜ், பாபு, இளைஞரணி மாவட்ட செயலாளர் அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில துணை செயலாளர் தாஜீதீன் பேசினார்.

கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு பாடுபடுவது. ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை அமல்படுத்தி மொரப்பூர், கடத்துாரிலுள்ள, 66 ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்ப வேண்டும். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அரசு சார்பில் மரவள்ளிகிழங்கு அரவை அமைக்க வேண்டும். அரூர் பகுதியில் வேளாண் கல்லுாரி அமைக்க வேண்டும். வாணியாறு அணை கால்வாய்களை நீட்டித்து, பாசன வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us