தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தேர்தலின் போது பெறப்பட்ட துப்பாக்கிகள் திரும்ப வழங்கல்

தேர்தலின் போது பெறப்பட்ட துப்பாக்கிகள் திரும்ப வழங்கல்

தேர்தலின் போது பெறப்பட்ட துப்பாக்கிகள் திரும்ப வழங்கல்


ADDED : மே 25, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரூர் சப்- டிவிஷனில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில், கடந்த ஏப்., 23ல் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலை அமைதி-யாக நடத்தவும், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்ப-டாமல் தடுக்கவும், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்தவர்களை ஒப்படைக்கும்படி போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதைய-டுத்து, அரூர் சப்-டிவிஷனில் உரிமம் பெற்று துப்-பாக்கி வைத்திருந்த, 134 பேர் தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், துப்பாக்கிகளை பெற்றுச் செல்லுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைய-டுத்து, உரிமம் பெற்றவர்கள் போலீஸ் ஸ்டேஷ-னுக்கு சென்று தங்களது துப்பாக்கிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனிடையே, துப்-பாக்கி உரிமம் காலாவதியானவர்கள் அவற்றை புதுப்பித்து, துப்பாக்கியை பெற்றுச் செல்லுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு, போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us