/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் சிறப்பு முகாம் படிவங்கள் மீது ஆய்வு
/
வாக்காளர் சிறப்பு முகாம் படிவங்கள் மீது ஆய்வு
ADDED : டிச 03, 2024 07:15 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் பட்டி-யலில் பெயர் சேர்த்தல், நீக்கம்
மற்றும் திருத்தங்களை மேற்-கொள்ள ஏதுவாக, மாவட்டத்தில் உள்ள, 1,096
ஓட்டுச்சாவடிக-ளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடந்தது. இதில்
மொத்தம், 46,404 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. ஓசூர் மற்றும் தளி சட்டசபை
தொகுதிக்கான படிவங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல்
பார்வையாளராக நியமிக்கப்பட்-டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ஆணையர் (பயிற்சி) ஆனந்தகுமார் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா உட்பட அரசு துறை அலுவலர்கள்
உடனிருந்தனர். இன்று (டிச.3) சேலம் மாவட்டத்-திலும், நாளை (டிச.4) தர்மபுரி
மாவட்டத்திலும், வாக்காளர் பட்-டியல் பார்வையாளர் ஆனந்தகுமார், சிறப்பு சுருக்க
முறை திருத்த முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.