/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மக்களால் பரபரப்பு
/
லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மக்களால் பரபரப்பு
லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மக்களால் பரபரப்பு
லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மக்களால் பரபரப்பு
ADDED : ஜன 20, 2024 07:45 AM
பாலக்கோடு : பாலக்கோடு அருகே, வாழைத்தோட்டம் பகுதியில் கோரிக்கைகள் நிறைவேற்றாததால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக, பொதுமக்கள் வைத்த பிளக்ஸ் பேனரால்
பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் வழியில் ரயில்வே தரைப்பாலம் மிகவும் தாழ்வாகவும், குறுகியதாகவும் உள்ளதால், 60 ஆண்டுகளாக கனரக வாகனங்கள் ஊருக்குள் வர, 8 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியுள்ளது. மேலும் இங்கு சரக்கு வாகனங்கள், டிராக்டர் போன்ற எந்த வாகனங்கலும் விவசாய பொருட்களை ஏற்றி செல்ல முடிவதில்லை.
மருத்துவமனைக்கு செல்ல -ஆம்புலன்ஸ்கள் வர வழியில்லை. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவ்வப்போது, உயிர் பலி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சாக்கடை கால்வாய் அமைக்க அனுமதி வழங்கப்படாததால், கழிவுநீர் ஊருக்குள் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, 2024 லோக்சபா தேர்தலை பொதுமக்கள் புறக்கணிப்பதாக ஊர் முகப்பில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.