/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலைைய ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
சாலைைய ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலைைய ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலைைய ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : செப் 23, 2024 03:52 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட, பாரதிபுரம் அருகே, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் அமைப்பு மூலம், சந்தை கடைகள் நடத்தப்படுகிறது.
இதில், சந்தை ஏற்பாட்டாளர்கள், வாகனங்கள் நிறுத்த பார்கிங் வசதி எதுவும் ஏற்படுத்துவதில்லை. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் அவர்களுடைய வாகனங்-களை சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலையில் நிறுத்தி விடுகின்-றனர். இவற்றால், காலை, 7:00 முதல், 10:00 மணி வரை போக்-குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில், அடிக்-கடி விபத்து நடந்து வரும் நிலையில், பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன், அவற்றை தடுக்க நெடுஞ்சாலையில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்த தடை செய்ய வேண்டும். மேலும், சந்தை ஏற்பாட்டாளர்கள் லாப நோக்கத்தை மட்டும் பார்க்காமல், பொதுமக்களுக்கு பாதுகாப்பிற்காக, உரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.