/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்
/
100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்
100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்
100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்
ADDED : மார் 04, 2026 08:49 AM
போச்சம்பள்ளி:சுண்டகாப்பட்டியில்,
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மிக குறைந்த அளவிலான கூலி
கொடுத்ததால், 50க்கும் மேற்-பட்டோர் சாலை மறியலுக்கு முயன்றனர்.
காவேரிப்பட்டணம்
ஒன்றியம், ஆவத்துவாடி பஞ்., சுண்டகாப்-பட்டியில், 100 நாள் வேலை
திட்டத்தில், பஸ் ஸ்டாப்பிலிருந்து ஜீவா வீடு வரை, 8.25 லட்சம் ரூபாய்
மதிப்பிலும், ராம் வீடு முதல் மாதேஷ் வீடு வரை 5.55 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டிலும் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. இப்பணிக்கு
சுண்டகாப்-பட்டி கிராமத்திலுள்ள, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்
ஈடுபட்டனர். அவர்களுக்கான கூலி வழங்கப்
படாமல் இருந்தது.
இதனால்
நேற்று காலை பணி ஒப்பந்ததாரரிடம் பேசி கூலித்-தொகையை பெற்ற,
சுண்டகாப்பட்டி, தி.மு.க., கிளைச்செய-லாளர் மூர்த்தி, 100 நாள் வேலை
திட்ட பணியாளர் ஒருவருக்கு, நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் என கணக்கிட்டு,
6 நாட்களுக்கு, 300 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த
பெண்கள், இது ஏமாற்று வேலை எனக்கூறி மறியலுக்கு முயற்சித்தனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, காவேரிப்பட்டணம் பி.டி.ஓ.,
செந்திலை வரவழைத்தனர்.
அவர் பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம்
கடத்தியதால் ஆத்திர-மடைந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள்,
காவேரிப்பட்டணம்- - அகரம் செல்லும் சாலையில், சுண்டகாப்பட்டி பஸ்
ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுண்டகாப்பட்டியை சேர்ந்த
பெண்கள் கூறுகையில், 'ஆவத்து-வாடி பஞ்.,ல், சுண்டகாப்பட்டி
கிராமத்தில் வருடத்திற்கு, 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர்.
ஆவத்துவாடி கிரா-மத்தில் ஒவ்வொரு பணியாளரும், 100 நாள் கடந்து பணி
செய்து வருகின்றனர். எங்களுக்கு தொடர்ந்து வருடத்திற்கு, 100
நாட்கள் வேலை வழங்க வேண்டும்'
என்றனர்.

