தரமற்ற முறையில் சாலை சீரமைப்பு தடுத்ததால் கிடப்பில் போடப்பட்ட பணி
தரமற்ற முறையில் சாலை சீரமைப்பு தடுத்ததால் கிடப்பில் போடப்பட்ட பணி
ADDED : ஏப் 04, 2026 06:26 AM
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்கு உட்பட்ட, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல், எச்.தொட்டம்பட்டி வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, 1.30 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை சீர-மைக்கும் பணிக்கு, கடந்த பிப்., 11ல் பூமி பூஜை நடந்தது.
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி பணி-களை துவக்கி வைத்தார். இந்நிலையில் கடந்த மார்ச், 16ல் சாலை சீரமைக்கும் பணியில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சாலை பெயர்க்கப்-படாமல் அதன்மேல் தார் கலவை கொட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட கிரா-மமக்கள் தார்ச்சாலையை முறையாக சீரமைக்க கோரி, பணிகளை தடுத்து நிறுத்தினர். அதன்பின் சாலை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்-டுள்ளது. இது குறித்து எச்.தொட்டம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:
அரூர், அரசு மகளிர் மேல்
நிலைப்பள்ளி முதல், எச்.தொட்டம்பட்டி வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அரூர் அரசு மகளிர் மேல்-நிலைப்பள்ளியில் இருந்து, பச்சினாம்பட்டி வரை, முக்கால் கி.மீ., துாரத்திற்கு சாலை பெயர்க்கப்-பட்டு, இரண்டு லேயர் ஜல்லிக் கற்கள் கொட்டப்-பட்டு சாலை சீரமைக்கும் பணி நடந்தது. ஆனால், பச்சினாம்பட்டி முதல் தொட்டம்பட்டி வரை சாலை பெயர்க்கப்
படவில்லை. மேலும், சாலையை குறுகலாக்கி அதன் மேலேயே தார் கலவை கொட்டப்பட்டு தார் ஊற்றப்பட்டது.
இதனால், ஜல்லிக் கற்கள் பெயர்ந்துவிட்டது. சில இடங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கியி-ருந்தது. அதைக்கூட சமன்
படுத்தாமல் அப்படியே அதன் மீது தார் ஊற்றினர். கடந்த மார்ச், 16ல் முறையாக சாலை அமைக்கு-மாறு கூறியவுடன், தொழிலாளர்கள் மற்றும் தார் ஊற்றும் வாகனம், தார் கலவையை ஏற்றி வந்த, 3 டிப்பர் லாரிகளை அதன் டிரைவர்கள் திரும்ப எடுத்துச் சென்றுவிட்டனர். அதன்பின் இதுவரை சாலை சீரமைக்கும் பணி துவங்கப்படவில்லை. இந்நிலையில், சாலையில் ஜல்லிகள் கொட்டப்-பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்-களும் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலை சீரமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
