ADDED : நவ 08, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 8---
கடத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தலலைமை ஆசிரியர் அழகம்மாள் தலைமையில் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவியர், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கார் பயணத்தின் போது, சீட் பெல்ட் அணிவதன் அவசியம், அதிவேகத்தால் ஏற்படும் விளைவுகள், ஹெல்மெட் அணிவது கட்டாயம், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது, விதிமுறைகளை பின்பற்றி, விபத்தை தடுத்தல் குறித்து, மாணவியர் பொதுக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் எஸ்.ஐ.,க்கள் நவீன், சேகர், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.