ADDED : ஜன 26, 2025 04:32 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். பாலக்கோட்டு அடுத்த கல்கூ-டப்பட்டியில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் உயிர் கவசம், மது போதையில் வாகனம் ஓட்டாதே, மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு, 4 சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்பு-ணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்-டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாலக்கோடு போக்குவ-ரத்து எஸ்.ஐ., கண்ணன், போலீசார் கிருஷ்ணன், குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

