/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழா
/
விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழா
விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழா
விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழா
ADDED : மார் 01, 2024 02:24 AM
பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார்
அருகே சில்லாரஹள்ளியிலுள்ள, ஸ்ரீ விநாயகா வித்யாலயா மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு வாரவிழா மற்றும்
குழந்தைகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கு விழா, பள்ளி தாளாளர்
தனலட்சுமி விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.
பள்ளி முதல்வர்
ராமராஜன் வரவேற்றார். விழாவில், தர்மபுரி வட்டார போக்குவரத்து
அலுவலர் தாமோதரன் பேசினார். பின் குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனம்
மூலம் வழங்கப்பட்ட தலைக்கவசங்களை, குழந்தைகளுக்கு வழங்கினார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்,
குளித்தலை கிராமிய தொண்டு நிறுவன இணை இயக்குனர் தனபால் ராஜ், நிர்வாக
அலுவலர் கோபாலகிருஷ்ணன், திட்ட அலுவலர் ஸ்ரீகாந்த் மற்றும்
ஆசிரியர்கள் பெற்றோர் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.