/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு
/
8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு
8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு
8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : நவ 01, 2025 01:44 AM
சேலம், சேலம் மாவட்டம், வாழப்பாடி மின் கோட்டத்தில், நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை, திருப்பூர், தர்மபுரி மற்றும் சேலம் மின் திருட்டு தடுப்பு படைகளை சேர்ந்த, 10 பேர் கொண்ட குழுவினர் இரு பிரிவாக காலை, 10:00 மணிக்கு தொடங்கி, இரவு, 7:00 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், வாழப்பாடி வடக்கு உப கோட்டத்தில் விதிமீறல், மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு இணைப்புகளுக்கு, 3 லட்சத்து, 52 ஆயிரத்து, 358 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல, தெற்கு உபகோட்டத்தில், 4 இணைப்புகளில் விதிமீறல் மற்றும் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 7 லட்சத்து, 16 ஆயிரத்து, 343 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 701 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின்பாதைகளில், இரவு நேரங்களில் கொக்கி போட்டு, மின்சாரம் திருடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.