தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.49 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.49 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.49 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 26, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி நிலையான கண்காணிப்பு குழு ராஜசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் பொம்மிடி - ராமமூர்த்தி நகர் செல்லும் சாலையில் வேப்பாடி ஆறு பாலம் பகுதியில் நேற்று மதியம், 12:15 மணியளவில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சுங்கரஹள்ளியில் இருந்து, சேலம் மாவட்டம் மோரூருக்கு சென்ற பல்சர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கில் ரேகடஹள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், 30 என்பவர், உரிய ஆவணமின்றி, 1.49 லட்சம் ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us