ADDED : மார் 27, 2026 05:38 AM
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி
சட்டசபை தொகுதி பறக்கும் படை குழு நாராயணன் தலைமையிலான குழுவினர்,
ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் நேற்று மதியம், 3:45 மணியளவில் வாகன
சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தர்மபுரியில் இருந்து கடத்துார்
நோக்கி வந்த, மாருதி ஷிப்ட் டிசையர் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த வீரமணி, 58, என்பவர் உரிய
ஆவணமின்றி, 57,000 ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த
பணத்தை பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
அப்பணம் மூடி முத்திரையிட்டு, அரசு கருவூலத்தில்
ஒப்படைக்கப்பட்டது.* கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி
சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், சூளகிரி - உத்தனப்பள்ளி
சாலையில் உள்ள டி.குருபரப்பள்ளி பகுதியில் நேற்று மாலை, 6:00 மணிக்கு
வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த
போது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ்வர்மா என்பவர், உரிய
ஆவணமின்றி, 1.09 லட்சம் ரூபாய் கொண்டு செல்வது தெரிந்தது. அப்பணத்தை
பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
