/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துணிக்கடை கூரையை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு
/
துணிக்கடை கூரையை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு
ADDED : ஜன 06, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்த முருகன், 39. இவர் தர்மபுரி ஆறுமுக ஆச்சாரி தெருவில், துணிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த, 3 அன்று இரவு, 11:00 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை, 9:30 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது, கடையின், 3வது மாடியிலுள்ள கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், தரை தளத்தின் கல்லாவில் இருந்த, 1.95 லட்சம் ரூபாயை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து முருகன் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.