ADDED : ஏப் 03, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை குழு, நித்யா தலைமையிலான குழுவினர் செம்மனள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மாலை, 6:45 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கோபிநாதம்பட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஹூண்டாய் வெர்னா காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வந்த தர்மபுரி பிடமனேரியை சேர்ந்த ரொமேஷ்சந்திரா, 45, உரிய ஆவணமின்றி, 2 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இதனால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
