ADDED : மார் 22, 2026 07:00 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி பறக்கும் படையினர், ஆலப்-பட்டி அருகே பாலகுறியில்
வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல்,
சேலம் மாவட்டம் சாரதா கல்-லுாரி பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் எடுத்து
வந்த, 1.02 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல், கிருஷ்ணகிரி,
குப்பம் சாலையில் அரசு பாலிடெக்னிக் அருகே, காரில் உரிய ஆவணங்கள்
இல்லாமல், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்-டத்தை சேர்ந்த சிவாலட்சுமி
நாராயணரெட்டி என்பவர் கொண்டு சென்ற, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டது. பறிமுத-லான, 2.02 லட்சம் ரூபாய், உதவி தேர்தல்
நடத்தும் அலுவலர் ஷாஜகான், தாசில்தார் ரமேஷ் ஆகியோரிடம்
ஒப்படைக்கப்பட்-டது.
* அரூர் தொகுதிக்கு உட்பட்ட தீர்த்தமலை
சோதனைச்சாவ-டியில், நேற்று காலை, 8:30 மணிக்கு தேர்தல் பறக்கும்
படை-யினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரூரில் இருந்து
நரிப்பள்ளிக்கு ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த வைர-மணி என்பவர்
ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள்
இன்றி, 89,000 ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து
பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அரூர் ஆர்.டி.ஓ.,
அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் செம்மலையிடம்
ஒப்படைத்தனர்.
