ADDED : மார் 21, 2026 07:02 AM
பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், பறக்கும் படை அதிகாரி நித்யா தலைமையி-லான குழுவினர் நேற்று மதியம், 1:45 மணிய-ளவில் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடு-பட்டனர். அப்போது, பொ.மல்லாபுரத்தில் இருந்து கடத்துார் நோக்கி சென்ற பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது திப்பிரெட்டி அள்ளியை சேர்ந்த மாதேஷ், 47, மாதையன், 66. ஆகியோர், 51,800 ரூபாயை உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்-வது தெரியவந்தது. அவர்களிடமிருந்து தொகை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தொகையை, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவ-லகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, செந்தில் ஆகியோரிடம் ஒப்-படைக்கப்பட்டு, அவை மூடி முத்திரையிட்டு அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்-டது.
