ADDED : ஏப் 18, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; ஆவணிமின்றி காரில் கொண்டு சென்ற, ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை அதிகாரி சேட்டு தலைமையிலான குழு-வினர், ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் நேற்று மாலை, 3:00 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடத்துார் பகுதியில் இருந்து, தர்மபுரி நோக்கி வந்த மகேந்திரா பொலிரோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த பையர்நத்தம் போதக்காடு, முல்லை நகரை சேர்ந்த ராஜா, 34, உரிய ஆவ-ணமின்றி, 65 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவல-கத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்-தனர்.
