ADDED : ஏப் 06, 2026 02:51 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் நிலையான கண்கா-ணிப்பு குழு, மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் மஞ்ச-வாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நேற்று மாலை, 3:45 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்-போது கோவையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ஹவுண்டாய் ஐ20 காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிகல், அன்னபூர்-னேஸ்வரி நகரை சேர்ந்த சையத் அசாரூதின், 40, உரிய ஆவண-மின்றி, 87,850 ரூபாய் வைத்திருந்தார். அப்பணத்தை அதிகா-ரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவல-கத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
