/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு
/
அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு
அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு
அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு
ADDED : ஜூன் 12, 2024 07:35 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த காலங்களில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
அதை அதிகரிக்கும் வகையில், புதிதாக பள்ளியில் சேரும், ஒவ்வொரு மாணவருக்கும், 500 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களும், 500 ரூபாய் ரொக்கமும் பள்ளியின் பி.டி.ஏ., தலைவர் கவுதமன் தன் சொந்த செலவில் வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.
இதேபோன்று ஆசிரியர், மாணவர்கள் என, 5 பேர் கொண்ட குழு, புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பில் மாநில அளவில், 3ம் இடம் பிடித்தது. அவர்களை பி.டி.ஏ., தலைவர் கவுதமன், பொருளாளர் கோகுல்நாத், தலைமை ஆசிரியர் பாலமுருகன், உதவி தலைமை ஆசிரியர் தமிழ் தென்றல் ஆகியோர் பாராட்டினர்.