/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம்
/
ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம்
ADDED : டிச 03, 2024 07:15 AM
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை, சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில்
உள்ள, சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும்
கார்த்திகை, 3-வது வார சோமவார தினத்தன்று, ருத்ரா அபிஷேகம் நடத்தப்படுவது
வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ருத்ரா அபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி,
கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தன. பின்னர்,
118 சங்கு பூஜை மற்றும் பூர்த்தி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 11 வகை-யான தீர்த்தங்கள்
மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு, ஆனந்த நடராஜர் மற்றும்
சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உபகார பூஜைகள், சிறப்பு அலங்கார
சேவையும், மஹா தீபாராதனையும் நடந்தது. இதை, திரளான பக்தர்கள் தரிசனம்
செய்தனர்.