ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
ADDED : பிப் 01, 2026 04:38 AM
தர்மபுரி: தமிழ்நாடு ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, தர்மபுரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் இளங்குமரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுருளிநாதன் உட்பட பலர் பேசினார். இதில், ஊரக வளர்ச்சிதுறையில் காலியாக உள்ள, 1,500க்கும் மேற்பட்ட பஞ்., செயலர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உட்பட அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். பி.டி.ஓ., தலைமையில் தனி ஊழியர் கட்ட-மைப்பினை ஏற்படுத்த வேண்டும். உட்பட, 18 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தி, பிப்., 10 முதல் நடக்கவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை ஊழியர்களும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
