/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கார் கவிழ்ந்த விபத்தில் சேலம் தம்பதி உயிரிழப்பு
/
கார் கவிழ்ந்த விபத்தில் சேலம் தம்பதி உயிரிழப்பு
ADDED : அக் 17, 2025 07:49 PM

பாப்பிரெட்டிப்பட்டி: தீபாவளி பண்டிகைக்காக, வெள்ளி கொலுசுகளை, கடைகளுக்கு டெலிவரி செய்ய எடுத்து சென்ற போது விபத்தில் சிக்கி, சேலம் தம்பதியினர் உயிரிழந்தனர்.
சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 58; வெள்ளி வியாபாரி. இவரது மனைவி கவிதா, 49. இவர்கள், நேற்று காலை தங்களுக்கு சொந்தமான, 'மாருதி சுசூகி ரிட்ஸ்' காரில், 34 கிலோ வெள்ளி பொருட்கள், 23,000 ரூபாய் ரொக்கத்துடன், சேலத்தில் இருந்து சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காலை, 8:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த கார், இருளப்பட்டி கானியம்மன் கோவில் எதிரே சாலையில் சென்ற அப்பகுதியை சேர்ந்த திருமுருகன், 42, என்பவர் மீது மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில், கவிதா, 49, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பாலசுப்ரமணியன் மற்றும் திருமுருகன் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பாலசுப்ரமணியன் சிகிச்சை பலனின்றி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தீபாவளியை முன்னிட்டு, அரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்ற ஆர்டரின் படி செய்த வெள்ளி கொலுசுகள் உள்ளிட்டவற்றை, கடைகளுக்கு டெலிவரி செய்ய எடுத்து சென்ற போது, தம்பதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.