/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு பெரும் தொகை விரயம்; நல்லசாமி தகவல்
/
சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு பெரும் தொகை விரயம்; நல்லசாமி தகவல்
சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு பெரும் தொகை விரயம்; நல்லசாமி தகவல்
சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு பெரும் தொகை விரயம்; நல்லசாமி தகவல்
ADDED : ஜன 23, 2024 10:25 AM
அரூர்: சேலத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு, பெரும் தொகை விரயம் செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'கள்' இயக்கம் அறிவித்தபடி, நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், 'கள்' இறக்கி சந்தைப்படுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், சியாம்பூண்டி கிராமத்தில், என் தலைமையில் 'கள்' இறக்கப்பட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதுவரை, 'கள்' இறக்கியதாக போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.
வரும், 2024 லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் முன், 'கள்' மீதான தடையை, தமிழக அரசு நீக்கும் என, எதிர்பார்க்கிறோம். இல்லா விட்டால் தமிழகத்தில், 39 தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழப்பர். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக, 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடக்கும். இதில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்பர். ராமர் சீதை திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு,'கள்' கொடுத்து உபசரித்ததாக, கம்பராமாயணம் கூறுகிறது.
மாநாடு என்ற பெயரில், சேலத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு, பெரும் தொகை விரயம் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், முதல் கையெழுத்து, 'நீட்' ஒழிப்பு என அமைச்சர் உதயநிதி கூறினார். ஆனால் தற்போது, 2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், 'நீட்' ஒழிப்பு எனக் கூறுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், 'நீட்' ஒழிப்பு நடக்காது.
இவ்வாறு, அவர் கூறினார்.

