/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரிக்கரை உடைப்பை தடுக்க மணல் மூட்டை அடுக்கும் பணி
/
ஏரிக்கரை உடைப்பை தடுக்க மணல் மூட்டை அடுக்கும் பணி
ADDED : டிச 15, 2024 01:28 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 15---
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைக்கோட்டையில், 83 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. கடந்த, 2011ல் ஏரி முழு கொள்ளளவை எட்டியபோது, மதகுப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை உடைந்தது. பின், அதிகாரிகள் அப்பகுதியை சீரமைத்தனர். அதன் பிறகு ஏரிக்கரை நல்ல நிலையில் இருந்தது.
தற்போது, வாணியாறு அணையில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஏரி வேகமாக நிரம்பியது. இதையடுத்து கரை பகுதிகளில், 200 மீட்டர் அளவில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களிடையே, கரை உடை யும் நிலை உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி யில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் நேற்று காலை கடத்துார் ஒன்றிய உதவி பொறியாளர் பழனியம் மாள், துணை பி.டி.ஓ., செல்வி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், மணல் மூட்டைகள் கொண்டு ஏரிக்கரைகளை பலப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல அனுமதிக் கப்பட்டது. மதுபான கடை திறக்கப்பட்டது.