sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

/

துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 18, 2026 07:33 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை துாய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே, கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சுப்பு தலைமை வகித்தார். பொருளாளர் எல்லம்மாள் முன்னிலை வகித்தார். துணைச்செயலாளர் பிரதாபன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில், அரசு பள்ளி கல்வித்துறை துாய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளத்தை, உயர்த்தி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு சீருடை, முகக்கவசம், கையுறை மற்றும் துாய்மை பணி செய்ய அனைத்து உபகரணங்களும் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். தினமும் வருகை பதிவேட்டில் கையொப்பம் பெற வேண்டும். கல்வித்துறை சார்பில், அடையாள அட்டை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us