/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரிக்கரையில் நட்ட மரக்கன்றுகள்; கால்நடைகளால் அழியும் அபாயம்
/
ஏரிக்கரையில் நட்ட மரக்கன்றுகள்; கால்நடைகளால் அழியும் அபாயம்
ஏரிக்கரையில் நட்ட மரக்கன்றுகள்; கால்நடைகளால் அழியும் அபாயம்
ஏரிக்கரையில் நட்ட மரக்கன்றுகள்; கால்நடைகளால் அழியும் அபாயம்
ADDED : டிச 09, 2024 07:45 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, ராமக்காள் ஏரிக்கரையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை கால்நடைகள் மேய்ந்து வருவதால், மரக்கன்றுகள் அழியும் அபாயம் உள்ளதால், அவற்றை நட்ட சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில், மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு வருகின்றனர். அதன்படி தர்மபுரி அருகே உள்ள ராமக்காள் ஏரிக்கரையில், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். 2 கி.மீ., நீளமுள்ள இந்த ஏரிக்கரையில், சமூக ஆர்வலர்கள் பலர், பல வகையான மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் விட்டு வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பழைய தர்மபுரியை சேர்ந்த சிலர், தங்கள் கால்நடைகளை இந்த ஏரிக்கரையில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். அவை, துளிர் விடும் செடிகள், வளர்ந்து வரும் மரக்கன்று களையும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையிலுள்ள புற்களையும் தின்று வருகின்றன. இதனால், நகரை பசுமையாக்கும் வகையில் நட்ட மரக்கன்றுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஏரிக்கரையில் கால்நடைகளை மேய்பவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.