தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சைகையில் ஓட்டு சேகரித்த சசிகலா

சைகையில் ஓட்டு சேகரித்த சசிகலா

சைகையில் ஓட்டு சேகரித்த சசிகலா


ADDED : ஏப் 19, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளராக, சென்னகிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் சசிகலா நேற்றிரவு, 8:00 மணி முதல், 10:00 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், பிரசாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 10:00 மணி வரை அவர் வரவில்லை. ‍தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இரவு, 10:00 மணியுடன் தேர்தல் பிரசார நேரம் முடிவடைந்தது.

இந்நிலையில், 10:18 மணிக்கு சசிகலா பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் வந்தார். ஆனால், 10:00 மணிக்கு மேல் ஆனதால், அவர் திறந்தவேனில் சைகை மூலம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு ஓட்டளிக்க கேட்டு, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே சைகை காட்டி ஓட்டு சேகரித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாலை, 6:00 மணி முதல் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us