தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தேர்தல் பணி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

தேர்தல் பணி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

தேர்தல் பணி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு


ADDED : ஏப் 12, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், ஏஅரூர் (தனி) தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்கள் மற்றும் தலைமை ஓட்டுச்சாவடி மைய அலுவலர்களுக்கு, நம்பிப்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

இதில், மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைத்து, செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை அரூர் சட்டசபை தொகுதி பொதுப் பார்வையாளர் பரம்வீர் சிங், தேர்தல் நடத்தும் அலுவலர் செம்மலை ஆகியோர் பார்வையிட்டனர். பயிற்சியின் போது, ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் முறையை புரிந்து கொண்டு, பிழையற்ற தேர்தல் செயல்முறையை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுப்பதிவு முடிவடைந்தவுடன், முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சிசிடிவி' கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடைமுறைகளில் சந்தேகங்கள் ஏற்பட்டாலோ, ஓட்டுப்பதிவில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாமல் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. இதில், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வள்ளி, சரவணன்

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us