ADDED : பிப் 27, 2024 03:27 AM
தர்மபுரி: சம வேலைக்கு, சம ஊதியத்தை வலியுறுத்தி, தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலகம் முன், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் சசிக்குமார் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.. தேர்தல் அறிக்கையில், சம வேலைக்கு சம ஊதியம், காலமுறை ஊதியம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க.. அரசு ஆட்சி பொறுப்பேற்று, 3 ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கவில்லை. இதனால், சென்னையில் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக, தி.மு.க.. தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, பொருளாளர் பழனிசாமி மற்றும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகளிரணி ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி கூறினார்.
