தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 06, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 07:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொருளாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் சசிகுமார் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

கடந்த, 2009க்கு பிறகு தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட, 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' இதுவரை வழங்கப்படாமல், 16 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். 2012ல், 3 லட்சம் பேர் இடைநிலை ஆசிரியர் தகுதிதேர்வு எழுதியதில், 12,000 பேர் பணி நியமனம் பெற்றனர். மத்திய அரசில் பணி புரியும் துாய்மை பணியாளர்களுக்கு இணையான ஊதியம், 20,600 ரூபாய் தான் எங்களுக்கும் வழங்கப்படுகிறது. தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும். கல்வி பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னணியில் உள்ள தமிழக அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக குறைவான ஊதியம் வழங்கி, பின்னணியில் இருக்கிறது. எனவே, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us