ADDED : ஆக 02, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி அரசு பொறியியல் கல்லுாரியில் செயல்படும், நாட்டு நலப்பணி திட்டம், சுற்றுசூழல் மன்றம் மற்றும் வனத்துறை சார்பாக, 'விதை பந்துகள்' ஒடசல்பட்டியில் உள்ள வனப்பகுதியில் துாவும் நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் சுமதி, நேற்று தொடங்கி வைத்தார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேம்பு, புங்கன், அத்தி, புளியம் உள்ளிட்ட விதை பந்துகளை வனத்துறையினர் உதவியுடன் உருவாக்கியிருந்தனர். நாட்டு நலப்பணி திட்ட பேராசிரியர் பரமேஸ்வரன் ஒருங்கிணைத்தார். கல்லுாரி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

