ADDED : அக் 20, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அக். 20-
அரூர் பகுதியில் பெய்த தொடர் மழையால், தனியார் உரக்கடைகளில் விதை நெல் விற்பனை ஜோராக நடக்கிறது.
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, தீர்த்தமலை, கீரைப்பட்டி, மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, மாம்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதி
களில், கடந்த சில நாட்களாக
பரவலாக மழை பெய்தது.
தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த விதை நெல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் தனியார் உரக்கடைகளில் நெல் விதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.