/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மண், கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
மண், கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : நவ 15, 2024 02:14 AM
மண், கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 15---
பாப்பிரெட்டிப்பட்டியில், எஸ்.ஐ., சக்திவேல் உள்ளிட்ட போலீசார், ஸ்டேஷன் முன்பு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடசமுத்திரம் பகுதியிலிருந்து, பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அந்த வாகனம் நிற்காமல் அதிகாரப்பட்டியை நோக்கி சென்றது. அதை துரத்திச்சென்ற போலீசார், தென்றல் நகரில் மடக்கி பிடித்தனர். அப்போது, டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பினார். லாரியை சோதனை செய்தபோது, அனுமதியின்றி கல், மண் எடுத்து வந்தது தெரிந்தது. டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர் அ.நடூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசனை தேடி வருகின்றனர்.