/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோட்டில் சப்- ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு
/
பாலக்கோட்டில் சப்- ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு
பாலக்கோட்டில் சப்- ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு
பாலக்கோட்டில் சப்- ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு
ADDED : ஜூலை 31, 2024 07:23 AM
தர்மபுரி: சப் -ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி வீரர்களுக்கான, தேர்வு பாலக்கோட்டில் நடக்கவுள்ளதாக, ஹாக்கி யூனிட் ஆப் தர்மபுரி தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராணிப்பேட்டையில் வரும் ஆக., 15 முதல், ஆக., 18 வரை, மாவட்டங்களுக்கு இடையிலான சப்- ஜூனியர் ஹாக்கி போட்டி நடக்கவுள்ளது.
தர்மபுரி மாவட்ட சப் -ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களுக்கான தேர்வு வரும் ஆக., 3ல் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் காலை, 7 மணிக்கு நடக்க உள்ளது. இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜன., 1 2008 பின் பிறந்தவராக இருக்க வேண்டும். இத்தேர்வில் ஹாக்கி வீரர்கள் பங்கேற்று, மாவட்ட போட்டியில் விளையாடலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.