ADDED : ஜூலை 24, 2025 01:22 AM
பென்னாகரம், பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ--நாம் மூலம் எள் ஏலம் நடந்தது. இதில், 232 விவசாயிகள், 485 குவிண்டால் எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், சிவப்பு எள் குவிண்டால், 8,260 முதல், 11,260 ரூபாய்க்கும், வெள்ளை எள் குவிண்டால், 11,330 முதல், 12,310 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
மொத்தம், 485 குவிண்டால் எள், 42.22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த, 21 முதல், வாரந்தோறும் திங்கட்கிழமையில் எள் ஏலம் எவ்வித கமிஷனின்றி, இ-நாம் மூலம் நடப்பதாகவும், இதில் கலெக்டர் அறிவுறுத்தலின் படி, வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொண்டதாகவும், எனவே, எள் விவசாயிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு, வேளாண் வணிகம் துணை இயக்குனர் இளங்கோவன், தர்மபுரி விற்பனைக்குழு செயலாளர் அருள்மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.