ADDED : ஏப் 12, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
ஓசூர் : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஓபிநாயக்கனஹள்ளி அருகே கொடகர
ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பன் மகன் அஜித், 24. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி விஷ்ணு தெருவில் தங்கி, தனியார் பெயின்ட் கடையில் விற்பனை அதிகாரியாக வேலை செய்கிறார்.
கடந்த, 9ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, தான் வசிக்கும் வீட்டின் முன் யமஹா பைக்கை நிறுத்தி விட்டு துாங்க சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, பைக் தீப்பிடித்து எரிந்தது. மர்ம நபர்கள் தீ வைத்ததை அறிந்த அஜித், ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
